Best Whatsapp Alternate App (Signal App)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் வாட்ஸ்அப்புக்கு பதிலாக (Whatsapp Alternate) வேறு ஒரு அப்ளிகேஷன் உள்ளது. அந்த அப்ளிகேஷனை பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது அதன் பிரைவசி பாலிசி அப்டேட் செய்துள்ளது. இது நம்மில் நிறைய பேருக்கு பிடிக்காத ஒன்றாக இருக்கிறது. இதனால் நிறைய பேர் வாட்ஸ் அப்பை விட்டுவிட்டு (Whatsapp Alternate) வேறு அப்ளிகேஷனை தேடி செல்கிறார்கள். அவர்களுக்கான ஒரு சூப்பரான ஒரு அப்ளிகேஷனை தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்வதற்கான லிங்க் இந்த பதிவில் கீழ் கொடுத்துள்ளேன். அந்தக் லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். அந்த அப்ளிகேஷன் உடைய பெயர் சிக்னல் ஆப் (Signal App) ஆகும். இதுவும் கிட்டத்தட்ட வாட்ஸ்அப் பை போலவே இருக்கும். இந்த அப்ளிகேஷனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி பார்க்கலாம்.
How To Use Whatsapp Alternate Signal App
முதலில் நீங்கள் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
இன்ஸ்டால் செய்த பின்னர் உங்களது மொபைல் நம்பர் கொடுத்து லாகின் செய்ய வேண்டும்.
அப்போது உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும். அந்த OTP அதுவே தானாக எடுத்துக் கொள்ளும்.
எடுத்துக்கொண்ட பின்னர் உங்களுக்கு அடுத்த பக்கத்திற்கு செல்லும் அந்த பக்கத்தில் உங்கள் பெயர் கேட்கும். உங்கள் பெயரை அதில் கொடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் உங்களது போட்டோ கேட்கும். அந்த போட்டோவையும் கொடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் நெக்ஸ்ட் கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள்.
அதில் உங்களுக்கு என ஒரு பின் நம்பர் கேட்கும். நான்கு இலக்க பின் நம்பர் கொடுக்க வேண்டும். நீங்கள் உங்களுக்கு ஞாபகம் இருப்பது போல ஒரு நான்கு இலக்க பின் நம்பரை கொடுத்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் இது அனைத்தும் கொடுத்தவுடன் உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் உள்ளே நுழைந்துவிடும். இனி நீங்கள் வாட்ஸ் அப் போலவே இதிலும் Chat செய்ய ஆரம்பிக்கலாம். இந்த ஆப் வாட்ஸ்அப் போலவே இருக்கும். இதிலும் வாட்ஸ்அப் போல பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. என்னைப் பொருத்தவரை இந்த அப்ளிகேஷன் (Best Whatsapp Alternate) வாட்ஸ் அப்பிற்கு கொஞ்சம் கூட குறைந்த அப்ளிகேஷன் கிடையாது. நல்ல அப்ளிகேஷனாக தான் தெரிகிறது. அதனால் நீங்களும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி பாருங்கள். சரி நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் வாட்ஸ் அப்பிற்கு பதிலாக (Whatsapp Alternate) வேறு எந்த ஆப் யூஸ் பண்ணலாம் என்பதை பார்த்தோம். அதற்கான அப்ளிகேசனையும் (Signal App) பார்த்தோம். இந்த அப்ளிகேஷன் நீங்கள் பயன்படுத்தி பாருங்கள். பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை இந்த பதிவின் கீழ் பதிவிடுங்கள். மேலும் உங்கள் நண்பர்களுக்கும் இந்த பதிவை பகிருங்கள். மேலும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கலாம்.
நன்றி!