How To Make Money From Youtube At Home
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் நாம் ஏற்கனவே பணம் சம்பாதிப்பதற்கு என்னென்ன வழிகள் உள்ளன என்பதை நாம் நமது தளத்தில் பார்த்துள்ளோம். அடுத்ததாக அதில் முதல் வழியான பிளாக்கர் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை நாம் பார்த்துள்ளோம். இப்பொழுது இந்த பதிவில் யூ டியூப் மூலம் எப்படி சம்பாதிப்பது (Make Money From Youtube) என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம். யூ டியூப் மூலம் சம்பாதிப்பதற்கு நம்மிடம் என்ன இருக்கவேண்டுமென்றால் யூட்யூப் சேனல் இருக்க வேண்டும்.
யூ டியூப் மூலம் சம்பாதிப்பதற்கு (Make Money From Youtube) என்ன செய்ய வேண்டும்?
யூ டியூபில் பல சேனல்கள் உள்ளன. நாம் யூ ட்யூப் மூலம் ஒரு சேனலை முதலில் உருவாக்க வேண்டும்.
அந்த சேனலை உருவாக்கும் போது நமக்கு மற்றவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுக்க தெரியும் என்பதை முதலில் நினைவில் கொண்டு அதற்கு ஏற்றவாறு சேனலை உருவாக்க வேண்டும்.
உருவாக்கிய பின்னர் நமக்குத் தெரிந்தவற்றை ஒரு வீடியோவாக பதிவு செய்து அந்த வீடியோவை யூ டியூப்பில் அப்லோடு செய்ய வேண்டும். இவ்வாறு நீங்கள் அப்லோட் செய்யும் பொழுது யூடியூபில் நீங்கள் போடும் வீடியோக்கள் மற்ற மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அந்த வீடியோ வைரலாகும். அவ்வாறு வைரலாகி அதிக பார்வையாளர்களை மற்றும் சப்ஸ்கிரைபர்களை பெற்றுக்கொள்ளும்.
இவ்வாறு சேனலை நீங்கள் உருவாக்கிய பின்னர் நீங்கள் கூகுள் ஆட்சென்ஸ் இணையதளத்திற்கு சென்று உங்கள் யூடியூப் சேனலை Monetization செய்யலாம். இவ்வாறு செய்யும்போது கூகுள் ஆட்சென்ஸ் உங்களது யூடியூப் வீடியோக்களுக்கு விளம்பரங்களை வழங்குவார்கள். இவ்வாறு அவர்கள் வழங்கும் விளம்பரங்களை உங்களது யூடியூப் வீடியோ பார்வையாளர்கள் பார்க்கும் பொழுது உங்களுக்கு கூகுள் ஆட்சென்ஸ் மூலம் பணம் கிடைக்கும்.
முக்கியமான விஷயங்கள் என்னவென்றால்
நீங்கள் போடும் வீடியோ உங்களுடைய சொந்த வீடியோவாக இருக்க வேண்டும்.
மற்றவர்களின் வீடியோவை எடுத்து நீங்கள் பதிவிட கூடாது.
யூ டியூபில் Monetization செய்வதற்கு தகுதி என்னவென்றால்
நமது சேனலில் 1000 சப்ஸ்கிரிபர் இருக்க வேண்டும். பின்னர் 4000 மணி நேரம் Watch Hours இருக்க வேண்டும்.
இவ்வாறு இருந்தால் நீங்கள் கூகுள் அட்சன்ஸ் அப்ளை செய்யலாம். கட்டாயமாக மொபைல் நம்பர் வெரிஃபிகேஷன் செய்திருக்க வேண்டும்.
சரி நண்பர்களே இன்று நாம் யூ டியுப் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிப்பது (Make Money From Youtube) என்பதை பற்றி பார்த்தோம். வரவிருக்கும் பதிவில் மேலும் இருக்கும் சில வழிகளையும் பார்ப்போம். மேலும் இதைபோல் பல பதிவுகள் நமது தளத்தில் வந்து கொண்டே இருக்கும். அதனால் தொடர்ந்து நமது தளத்திற்கு ஆதரவு தாருங்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்தமானதாக இருந்தால் மற்றும் பயனுள்ளதாக இருந்தால் மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள்.
நன்றி! வணக்கம்.