How To Make Money Online From Recharge
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவில் நாம் என்ன பார்க்க இருக்கிறோம் என்றால் பணம் சம்பாதிப்பதற்கான வழியில் ஒன்றான ரீசார்ஜ் மூலம் பணம் சம்பாதிப்பது (How To Make Money Online From Recharge) பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். ரீசார்ஜ் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்று உங்களுக்கு ஒரு சிலருக்கு தெரிந்திருக்கலாம். நிறைய பேருக்கு தெரியாமல் தான் இருக்கும்.
நண்பர்களே ரீசார்ஜ் மூலம் சம்பாதிப்பதற்கு (How To Make Money Online From Recharge) என்ன செய்ய வேண்டும்?
ரீசார்ஜ் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு நம்மிடம் என்ன இருக்க வேண்டும். அதற்கு நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும். என்பதை இந்த பதிவில் காணலாம். ரீசார்ஜ் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு சில அப்ளிகேஷன் பிளே ஸ்டோரில் உள்ளது.
அதில் ஒரு அப்ளிகேஷனை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும்.
தேர்ந்தெடுத்துக் கொண்ட பின்னர் ரீசார்ஜ் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு அந்த அப்ளிகேஷனில் உங்களுக்கு என ஒரு அக்கவுண்ட் கிரியேட் செய்து கொள்ள வேண்டும்.
கிரியேட் செய்த பின்னர் உங்களுக்கு ஒரு ஐடி பாஸ்வேர்டு வழங்கப்படும். இந்த ஐடி பாஸ்வேர்ட் வைத்து நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கு தொடங்கலாம்.
இதில் உங்களுக்கு எப்படி பணம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
நீங்கள் ஆயிரம் ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு முப்பது ரூபாய் கமிஷனாக கிடைக்கும்.
என்ன? ஆயிரம் ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 30 ரூபாய்தான் கிடைக்குமா? என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.
ரூபாய் 30 கிடைத்தாலும் அதுவும் நமக்கு ஒரு வருமானம் தான்.
இப்பொழுது இருக்கும் ரீச்சார்ஜ் பிளான்கள் எல்லாம் 500 ரூபாய் 600 ரூபாய் என்று இருக்கிறது.
நாம் நமக்கு நமது மொபைலில் ரீசார்ஜ் செய்வது இந்த அப்ளிகேஷன் மூலம் செய்தால் அதிலும் கமிஷன் கிடைக்கும்.
மேலும் நமது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மற்றும் நம் நண்பர்களுக்கு இதுபோன்ற நாம் தெரிந்தவர்கள் அனைவருக்கும் கேட்டு கேட்டு ரீசார்ஜ் செய்தால் நிச்சயம் நாம் இதில் ஒரு நல்ல அமௌன்ட் சம்பாதிக்க முடியும்.
சிலர் ஏதாவது ஒரு கடை வைத்து இருக்கலாம்.
அதாவது மளிகை கடை காய்கறி கடை இது போன்ற எந்த ஒரு கடை வைத்து இருந்தாலும் உங்களிடம் ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் இருந்தால் போதும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முடியும்.
உங்கள் கடையில் ஒரு விளம்பர பலகை மட்டும் வைத்தால் போதும். அதாவது இங்கு ரீசார்ஜ் செய்யப்படும். என்று ஒரு விளம்பரம் மட்டும் வைத்தால் போதும்.
நீங்கள் அதை வைத்து நிறைய (How To Make Money Online From Recharge) பணம் சம்பாதிக்க முடியும்.
சரி நண்பர்களே இன்று இந்த பதிவில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிப்பது (How To Make Money Online From Recharge) என்பதை பற்றி பார்த்தோம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். மேலும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கலாம்.
நன்றி! வணக்கம்.