How To Make Money From Admob At Home
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் இதற்கு முன்னதான பதிவில் எவ்வாறு பணம் சம்பாதிப்பது (Make Money From Admob) என்ற ஒவ்வொரு வழியாக பார்த்து வருகிறோம். இந்த பதிவில் அதில் ஒரு வழியைத் தான் பார்க்க இருக்கிறோம். அதாவது அப்ளிகேஷன் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பதை பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். அப்ளிகேஷன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். அப்ளிகேஷன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு முதலில் நாம் ஆண்ட்ராய்டு தளத்தில் பயன்படுத்தக் கூடியவாறு ஒரு அப்ளிகேஷனை தயார் செய்ய வேண்டும். அந்த அப்ளிகேஷன் மற்றவருடைய அப்ளிகேஷனை காப்பியடித்து இல்லாதவாறு உங்களுக்கான தனித்துவமான ஒரு அப்ளிகேஷனை தயார் செய்ய வேண்டும். அதுபோல் அனைவருக்கும் பயன்படும் வகையில் நாம் தயாரிக்க வேண்டும். இவ்வாறு தயாரித்த அப்ளிகேஷனை ஆட்மாப் என்ற தளத்தில் ரிஜிஸ்டர் செய்து அதில் உங்கள் அப்ளிகேஷனுக்கு என விளம்பரங்களை எடுத்து உங்கள் அப்ளிகேஷனில் கொடுக்க வேண்டும். கொடுத்த பின்னர் உங்கள் அப்ளிகேஷனை ப்ளே ஸ்டோரில் பதிவேற்ற வேண்டும்.
எப்படி ப்ளே ஸ்டோரில் பதிவேற்றி பணம் சம்பாதிக்கலாம் (Make Money From Admob) என்பதை பார்க்கலாம்.
ப்ளே ஸ்டோரில் பதிவிடுவதற்கு Google Play Console என்று ஒரு தளம் உள்ளது. அந்த தளத்தில் உங்களுக்கு ஒரு அக்கவுண்ட் இருக்க வேண்டும். இந்த அக்கவுண்ட் கிரியேட் செய்வதற்கு 25 டாலர் ஆகும். இவ்வாறு இதில் அக்கௌன்ட் கிரியேட் செய்த பின்னர் பிளே ஸ்டோரில் நாம் அப்ளிகேஷனை பதிவேற்றி கொள்ளலாம். நீங்கள் பதிவிடும் அப்ளிகேஷன் பிளே ஸ்டோரில் அனைத்து விதிமுறைகளுக்கும் கட்டுப்பாட்டு இருக்க வேண்டும். அவ்வாறு கட்டுப்பட்டு இருந்தால் மட்டுமே பிளே ஸ்டோரில் உங்கள் அப்ளிகேஷன் இடம்பெறும். பின்னர் உங்களது அப்ளிகேஷனை பயன்படுத்துபவர்கள் உங்கள் அப்ளிகேஷனில் காட்டப்படும் விளம்பரங்களை பார்த்து கிளிக் செய்தால் உங்களுக்கு அட்மாப் அக்கவுண்டில் இருந்து பணம் கிடைக்கும். இவ்வாறு அப்ளிகேஷன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்க (Make Money From Admob) முடியும். அப்ளிகேஷன் தயாரிப்பதற்கு பல வழிகள் உள்ளது. அப்ளிகேஷன் தயாரிப்பதற்கு அதில் சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம்.
அப்ளிகேஷன் தயாரிப்பதற்கு என்னென்ன வழிகள் உள்ளன.
- ஆண்ட்ராய்டு ஸ்டுடியோ மூலம் அப்ளிகேஷன் தயாரிக்கலாம்.
- எக்ளிப்ஸ் மூலம் அப்ளிகேஷன் தயாரிக்கலாம்.
- இன்டலிஜி மூலம் அப்ளிகேஷன் தயாரிக்கலாம்.
- ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் அப்ளிகேஷன் தயாரிக்கலாம்.
- மேலும் மிக சுலபமான வழியாக ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் தயாரிக்க சில இணையதளம் மூலமாகவும் அப்ளிகேஷன் தயாரிக்கலாம். இதற்கும் சில இணையதளங்கள் உள்ளன.
இவ்வாறு அப்ளிகேஷன் தயாரித்து நீங்கள் (Make Money From Admob) பணம் சம்பாதிக்க முடியும்.
சரி நண்பர்களே இந்த பதிவில் நாம் எவ்வாறு அப்ளிகேஷன் மூலம் பணம் சம்பாதிப்பது என்பதை பற்றி பார்த்தோம். இந்த பதிவு உங்களுக்குப் பிடித்தமானதாக மற்றும் பயனுள்ளதாக இருந்தால் மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள். மேலும் ஒரு நல்ல பதிவுடன் சம்பாதிக்கலாம்.
நன்றி! வணக்கம்.